வேலூர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து ஊர்வலம் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் திரளான கல்லூரி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு.
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆர்.டி.ஓ சாலை அருகில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் நுகர் வோர் தினம் மற்றும் நுகர் வோர் உரிமைகள் மீட்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இதனை வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி துவங்கி வைத்தார் இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி உள்ளிட்டோரும் திரளான கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று ஐ.எஸ்.ஐ முத்திரை பார்த்து பொருட்களை வாங்க வேண்டும்.
உணவு பொருட்களில் கலப்படம் செய்ய கூடாது நுகர் வோர் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் பில் வாங்க வேண்டும் பொருட்களின் தரம் அறிந்து அதனை வாங்கி பயன்படுத்த வேண்டும் உள்ளிட்டவைகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது இதனை திரளான பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பார்த்து பயனடைந்தனர்.
மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.
CATEGORIES வேலூர்
TAGS உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைசத்துவாச்சாரிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்நுகர் வோர் உரிமைகள் மீட்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்நுகர் வோர் தினம்முக்கிய செய்திகள்வேலூர்வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி