வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவதில் உதவிப் பொறியாளர் செந்தில் குமாரின் லஞ்ச லாவண்யம்!!

வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டட மனைப்பிரிவு அங்கீகார வழங்கலில் முறைகேடு புகார்கள் சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது.
மின் இணைப்பு, சாக்கடை, பூங்கா வசதிகளுக்கான ஒதுக்கீடு குளறுபடியால் பாதிப்பு புகாரும் எழுந்துள்ளது.
காலியிடங்களை குடியிருப்பு பகுதிகளாக வரன்முறை படுத்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் தமிழ்நாடு நகர ஊரமைப்பு பிரிவில், மனைப்பிரிவு அங்கீகாரம் பெற வேண்டியுள்ளது.
இதற்கான விதிமுறைப்படி சம்பந்தப்பட்ட நிலத்தின் 10ல் ஒரு பகுதி நிலம் உள்ளாட்சி பிரிவுகளுக்கு தானமாக வழங்கப்படுகிறது.
23 அடி அளவிற்கு குறைவில்லாத அகலத்தில் ரோடு, சாக்கடை , மின் கம்பம் போன்றவை அமைக்க 3ல் ஒரு பங்கு இடம் ஒதுக்கப்படுகிறது. ரோடு தவிர பூங்கா, தண்ணீர் தொட்டி, வணிக வளாகம் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு இடம் வழங்க வேண்டும். இதன்படி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு காலி இடத்தை தான செட்டில்மென்ட் மூலம் ஒதுக்கீடு செய்து வழங்குகின்றனர்.
வேலூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட பாரதி நகர், வி.ஜி. ராவ் நகர், காந்திநகர் பகுதியில் திருமண மண்டபங்கள் அமைந்துள்ளது மற்றும் வணிக வளாகங்களுக்கான அனுமதியின் போது கார் பார்க்கிங் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளும் கண்காணிக்கப்பட வேண்டியது அவசியம்.
ஆனால் பெரும்பாலான உள்ளாட்சி நிர்வாகத்தில் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் கவனிப்பு செல்வாக்கு, கையூட்டுக் காரணமாக இது போன்ற கட்டமைப்புகளை கண்டு கொள்வதில்லை.
இதனால் திருமண முகூர்த்த தினங்களில் பார்க்கிங் வசதி இல்லாத திருமண மண்டபத்தின் தெருகளில் திருமணத்திற்கு வருவோர் கார் மற்றும் டூவீலர்களை தெருவுக்களிலே பார்க்கிங் செய்யும் நிலை ஏற்படுவதுடன் இதனால் அத்தெருவுகளில் சென்று வரும் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.
அத்துடன் உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் இட மதிப்பீட்டை குறைத்து அனுமதி வழங்கப்பட்ட முறைகேடுகளும் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி வழங்கலில் குடியிருப்பு, வணிக கட்டடங்கள், காலியிட ஒதுக்கீடு, பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வேலூர் மாநகராட்சி நிர்வாகம் இவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த முன்வர வேண்டும்.
இதனைத் தொடர்ந்து வேலூர் மாநகராட்சி 1வது மண்டல அலுவலகத்தில் கட்டிடம் (ஊரமைப்பு) உதவிப் பொறியாளராக பணிபுரிந்து வருபவர் வேலூர் மாவட்டம், சோழவரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் குமார் இவர் வேலூர் மாவட்டத்தில் இருந்து தனி மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்காத போது ஜோலார்பேட்டை, வாணியம்பாடி போன்ற நகராட்சிகளில் பணிபுரிந்து வேலூர் மாநகராட்சிக்கு பதவி உயர்வில் வந்து சேர்ந்து சுமார் 9 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
தற்போது மாநகராட்சி 1வது மண்டலத்தில் உதவிப் பொறியாளராக பணிபுரிந்து வரும் இவர் இங்கு சுமார் 7 வருடங்களுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகிறார். ஒரு அரசு பணியாளர்கள் பிரிவு 73 விதியின் கீழ் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பணியிடம் மாற்றம் பெற வேண்டும் என்பது அரசு விதிகள் உள்ளது.
அதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு அரசு விதிமுறைகளுக்கு முரணாக ஒரே இடத்தில் சுமார் 7 வருடங்களுக்கும் மேலாக ஒரே இடத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வரும் உதவிப் பொறியாளர் இன்னும் ஏன் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை..?.,
அவர் செய்யும் முறைகேடான பணிகளுக்கு லஞ்சப் பணத்தை வசூலித்து மேலெடுத்து அதிகாரிகளுக்கு கப்பம் கட்டி ஒரே இடத்தில் பணிபுரிந்து வருவதா..?
மேலும் ஏற்கனவே அவர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் உதவி ஆணையர் (பொறுப்பு) பதவியும் வகித்தவர். அப்போது கூட முறைகேடுகள் செய்திருப்பார் இவர். என்பது நீங்களே போகப் போக அறிந்து கொள்வீர்கள் என்கின்றனர் நம்பத் தகுந்த வட்டாரங்கள்.
தற்போது கடைகோடி பாமரன் முதல் அரசு ஊழியர்கள் வரை வங்கிகளில் கடன் வாங்கி வீடு, கடைகள் உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ள திட்டமிடுதல்கள், மாநகராட்சி மூலம் அனுமதி வழங்கப்படும் உரிய தகுதி சான்று வங்கியில் சமர்ப்பித்தால்தான் கடன் உதவிப் பெற முடியும்.
ஆனால் வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் உள்ள ஊரமைப்பு பிரிவில் உதவிப் பொறியாளர் செந்தில்குமாரின் கீழ் பணிபுரியும் சில வெளி நபர்கள் இடைத்தரகரர்களாக ஊரமைப்பு பிரிவு அலுவலகத்தில் எந்நேரமும் தங்கள் ராஜ்யத்துடன் பணிபுரிந்து வரும் இந்த இடைத்தரகர்கள் கேட்கும் லஞ்சத்தால் வீடு கட்டுவோருக்கு உரிய சான்றிதழ் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக புதிய கட்டிடம் கட்டுவோர் வேதனையை தெரிவிக்கின்றனர்.
தற்போது வீடு கட்டுவதற்கு சிமெண்ட், கம்பி விலை உயர்வு ஆற்று மணல் கிடைப்பதில் பெரும் சிரமம் பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு உள்ளாட்சி நிர்வாக சீர்திருத்தத் துறை சுய சான்றிதழ் முறையில் கட்டிட கட்டும் நடுத்தர மக்கள் தங்களின் ஆவணங்களை முறையாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்து அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தினால் சுய சான்றிதழ் தாமாகவே வந்துவிடும் என்பது போன்ற வடிவம் அமைக்கப்பட்டு இருப்பது உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அதற்குக் கூட இது போன்ற கட்டிட
அனுமதி வழங்குவதற்கு பெரும் தொகையாக கையூட்டுப் பெறப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அதைவிட ஹைலைட் என்னவென்றால், வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் கட்டிடம் கட்டுபவர்கள், கட்டுமானத்தை தொடங்குவதற்கு முன் உள்ளூர் வாசி அல்லது திட்டமிடுதல் அதிகாரிகள் கட்டிட அனுமதி திட்டங்களை அங்கீகரிக்கின்றனர்.
கட்டிட அனுமதி பெற விட்டால் சட்ட விரோதமாக கருதப்படும். கட்டிட உரிமையாளர்கள் நேரடியாக தலையிடாத நிலையில் தங்களது கட்டிடத்தை கட்டி வரும் சிவில் இன்ஜினியர்களை அணுகுகின்றனர்கள். சிவில் இன்ஜினியர்கள் மாநகராட்சி அதிகாரிகளை நேரடி தொடர்பு வைத்துக்கொண்டு மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் உதவிப் பொறியாளர் செந்தில்குமாரிடம் இருந்து கட்டிட ஒப்புதல் பெறுவதற்கு பெரும் தொகையை கொடுத்து ஒப்புதல் பெற்றுக் கொள்கின்றனர்.
கட்டிட ஒப்புதல் பெறுவதற்கு லெ-அவுட் சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே பிளான் அப்ரூவல் இல்லாத மனைகளை உள்ளாட்சி அதிகாரிகளிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தி கட்டிட ஆய்வாளர்களிடம் தகுந்தா ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இதில் பிளாட்டின் மதிப்பிற்கு ஏற்றவாறு ஏ.பி.சி என்று பிரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
கட்டிடம் ஒப்புதல் பெற பத்திரம் சொத்து மதிப்பீட்டின் சான்று, சொத்து PID என் நகர ஆய்வு ஓவியம், சொத்து வரைபடங்கள், அடித்தள சான்றிதழ் புதுப்பித்தல், வரி ரசீதுகள் நில பயன்பாட்டுச் சான்று போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதில் கட்டிய வீட்டுக்கு கூடுதல் மின் இணைப்பு பெற தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்றாலும் ஊரமைப்பு பொறியாளர்களிடம் ஆவணங்கள் சமர்ப்பித்து அவர்களின் ஒப்புதலைப் பெற்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் அதன் பின்னால் அவர்களுக்கு கட்டிட அளவிற்கு ஏற்றார்போல் ஒரு பெரும் தொகையை கொடுத்து அனுமதி பெற வேண்டும் அவர் சம்பந்தப்பட்ட வீட்டை நேரில் சென்று ஆய்வு செய்து அனுமதி அளித்த பிறகு மின் இணைப்பு பெற முடியும்.
அவ்வாறு விதிகள் உள்ள நிலையில் மாநகராட்சி 1வது மண்டலத்தில் ஊரமைப்பு உதவி பொறியாளராக பணிபுரிந்து வரும் செந்தில் குமார் பல்வேறு ஆவண முறைகேடுகளில் லஞ்ச லவண்ணியம் கையூட்டுப் பெற்றுக் கொண்டு நேரில் சென்று கட்டிடங்களை ஆய்வு செய்யாமலே தனக்கு கீழ் பணிபுரியும் கோகுல், பாஸ்கர்கன் என்ற வெளி நபர்களை அனுப்பி கட்டிட ஆய்வு செய்வதாக கூறி அவர்கள் தனியாக ஒரு தொகையை கட்டிட உரிமையாளரிடம் கேட்கும் நிலை உருவாகியுள்ளதாம்.
அதுமட்டுமின்றி ஊரமைப்பு உதவிப் பொறியாளர் செந்தில்குமார் மாநகராட்சி ஒன்றாவது மண்டல அலுவலகத்திற்கு சரியாக வருவதில்லை ஏனென்றால் அவர் சொந்த மாவட்டம், உள்ளூரில் வசித்து வருவதால் அவர் எப்போது வேண்டுமென்றால் வருவார் சில வாரங்களுக்கு வருவதும் இல்லையாம் அவருக்கு கீழ் பணிபுரிந்து வரும் வெளி நபர்கள் அரசு ஊழியரா..! அல்லது தற்காலிக ஊழியரா..? என்பது கூட பலருக்கும் தெரியாத புதிராக உள்ளதால். நிலை உள்ளதால் அவர்கள் தான் அரசு ஊழியர்கள் என்று நினைத்து பலர் அவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து வருகின்றனர்.
சில சமயம் அலுவலகத்தில் உதவி பொறியாளர் செந்தில்குமார் இருக்கும் பொது. மாநகராட்சி பகுதிக்குட்பட்ட சமூக ஆர்வலர்கள் அவரை நேரில் சென்று கேள்வி எழுப்பினால் அவர் அரசல் புரசலாக பதில் கூறுவாராம்.
எனக்கு வரவேண்டிய வருமானம் அனைத்தும் மண்டல குழுத் தலைவர் புஷ்பலதா வன்னியராஜா பஞ்சாயத்து செய்து அவரே ஒரு தொகையை பார்த்து விடுகின்றனர். வேறு என்ன மிஞ்சுகிறது ஒன்றுமில்லை.
எனக்கு இந்த மண்டலத்தில் பணியாற்றவே பிடிக்கவில்லை என மழுப்பலாக பதில் கூறிக் கொள்கிறார். இது சம்பந்தமாக சிலர் பெயரைக் குறிப்பிடாத கவுன்சிலர்கள் கூறுகையில், இடைத்தரகர்கள் போல் கூட செயல்படுகிறார்கள்.
வேலூர் மாநகராட்சியை பொருத்தவரையில் ஒவ்வொரு பிரிவிலும் அவரவர் சீட்டிற்கு ஏற்றவாறு கணிசமாக ஒரு தொகையை கையூட்டு வாங்குகின்றனர்.
இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை இதனால் ஆளுங்கட்சிக்கு தான் மக்கள் மத்தியில் களங்கும் ஏற்படுகிறது கூறுகின்றனர்.
இந்த தகவல் அறிந்த சில பத்திரிகையாளர்கள் நேரில் சென்று உதவிப் பொறியாளர் செந்தில்குமாரிடம் முறைகேடான கட்டிடங்களுக்கு சுய சான்றிதழ் அனுமதி வழங்குவது குறித்துக் கேள்வி எழுப்பினால் அவர்களுக்கு கணிசமாக ஒரு தொகையை கவரில் போட்டு அங்கு பணிபுரியும் வெளிநபரான கோகுலிடம் கூறி வந்த நபருக்கு கொடுக்கச் சொல்லி விடுவாராம்.
எனவே வேலூர் மாநகராட்சி 1வது மண்டல அலுவலகம் ஊரமைப்பு பிரிவில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினர் திடீரென்று நுழைந்து சோதனையிட்டால் பல்வேறு முறைகேடான ஆவணங்கள் லஞ்சப் பணங்கள் சிக்கக்கூடும் என்பதில் எந்த ஐயமும் என்கின்றனர் நம்பத் தகுந்த வட்டாரங்கள். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்பதை..!!