BREAKING NEWS

வேலூர் மாநகராட்சி 33வது வார்டு பகுதியில் பெண் பள்ளத்தில் விழுந்து படுகாயம்: நேரில் சென்று பார்வையிட்ட அதிமுக மாவட்ட செயலாளர்!

வேலூர் மாநகராட்சி 33வது வார்டு பகுதியில் பெண் பள்ளத்தில் விழுந்து படுகாயம்: நேரில் சென்று பார்வையிட்ட அதிமுக மாவட்ட செயலாளர்!

வேலூர் மாநகராட்சி 33 வது வார்டு நவநீதியம்மன் கோவில் தெரு பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 48 வயதுக்குரிய பெண் பள்ளத்தில் விழுந்தார்.

இதனால் அவரது கால் எலும்பு உடைந்தது. இதனை அறிந்த
அதிமுக வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர், இளைஞர்களின் எழுச்சி நாயகன் எஸ். ஆர். கே.அப்பு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.


பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து எஸ். ஆர். கே. அப்பு ஆறுதல் கூறி, எந்த உதவியானாலும் நேரடியாக உங்களை தேடி வந்து செய்கிறேன் என்று உறுதியளித்தார்.

மேலும் அங்குள்ள பொதுமக்கள் அதிமுக மாவட்ட செயலாளரிடம் எங்களுக்கு அத்தியாவசியான சாலை , கால்வாய் , மின்விளக்கு , குடிநீர் ஆகிய வசதிகள் முறையாக கிடைக்கவில்லை என்று முறையிட்டனர்.

மாவட்ட செயலாளர் அப்பு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

Share this…

CATEGORIES
TAGS