BREAKING NEWS

வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சியின் வளர்ச்சி திட்ட பயிற்சி..

வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சியின் வளர்ச்சி திட்ட பயிற்சி..

வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு ஒன்றியங்களுக்கு உட்பட்ட பிற துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு இன்று 25/04/2023 உள்ளூர் மயமாக்கப்பட்ட நீடித்த நிலையான வளர்ச்சிகளை உள்ளடக்கிய ஒன்பது கரு பொருட்களைக் கொண்டு கிராம ஊராட்சியின் வளர்ச்சி திட்டம் தயாரிக்க ஒரு நாள் பயிற்சி மாவட்ட வளமைய அலுவலகத்தில் நடைபெற்றது.

 

இப்பயிற்சியினை உதவி இயக்குனர் ஊராட்சிகள் திரு இராமகிருஷ்ணன் அவர்கள் பயிற்சியினை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

 

மேலும் இப்பயிற்சியினை மாவட்ட வளமைய பயிற்றுநர்கள்  கணேசன்,  சீனிவாசன்,  நாகராணி, அந்தோணியம்மாள், கவிதா ஆகியோர்கள் பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சிக்கு மாவட்ட வளமைய அலுவலர் உத்திராபதி சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

CATEGORIES
TAGS