வேலூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல்

வேலூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும் தாசில்தார் கோடீஸ்வரன் தகவல் கிடைத்ததைய டுத்து காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்பிரகாஷ் மற்றும்காட்பாடி போலீசார்கூட்டாக சேர்ந்து காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை செக்போஸ்டில் சோதனை மேற்கொண்டனர்அ ப்பொழுது ஆந்திரா மாநிலத்துக்கு சென்ற லாரியை மடக்கி சோதனை இட்டனர் அதில்வேலூரில் இருந்து ஆந்திரா வழியாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருக்கு கடத்த முயன்ற25 கிலோசிப் பங்களில்15 டன் அரிசி கடத்தப்படுவது தெரிய வந்தது இதனையடுத்து லாரியை ஒட்டி வந்த திண்டிவனத்தைச் சேர்ந்த டிரைவர் வடிவேல் என்பவரை போலீசார் கைது செய்தனர் விசாரணையில் வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா வழியாக கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருக்கு கடத்தப்படுவது தெரிய வந்தது இதனை அடுத்து25 கிலோ சிப்பம்15டன்ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்தனர் மீட்கப்பட்ட அரிசி சிவில் சப்ளை குடோனில்ஒப்படைக்கப்பட்டது.

