BREAKING NEWS

வேலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

வேலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

வேலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

அசத்தும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்

வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க வும், அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தேசிய,மாநில சாலைகளில் அதிகளவு விபத் துகள் நடைபெறும் இடங்கள் அங்கு வேகத்தடை, ஒளிரும் மின்விளக்குகள், இரும்பு தடுப்புகள், மண்நிரப்பிய இரும்பு பேரல்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் இரவு நேரத் தில் சாலை விபத்துகளை தவிர்க்க மின்விளக்குகள் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. பெங்களூரு- தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வேலூர் புதிய பஸ்நிலையம் செல்லும் பகுதி, அப்துல்லாபுரம் விமானநிலையம் அருகே, எஸ்.என்.பாளையம் ஆகிய 3 இடங்களில் விழிப்பு ணர்வு மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த விளக்குகளில் இருந்து வெளிச்சத்தில் வாகனங்கள் மெதுவாக செல்லவும், வாகனங்களை நிறுத்தக் கூடாது, இடது அல்லது வலது புறமாக செல்ல வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் சாலையில் பிரகாசமாக தெரியும்.

இவற்றை பார்க்கும் கனரக வாகனஓட்டிகள் அந்த இடங்களில் விழிப்புணர்வு வாசகங்களை பின்பற்றுவார்கள்

இதன்மூலம் அந்த பகுதியில் விபத்துகள் குறையும். குறிப்பாக இரவு வேளைகளில் ஏற்படும் இருசக்கர வாகன விபத்துகள் குறைய வாய்ப்புள்ளது என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

Share this…

CATEGORIES
TAGS