வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அவர்களின் ஆலோசனையின் படி காட்பாடி மதி நகரில் தெற்கு பகுதியில்,
புதிய திமுக உறுப்பினர் சேர்க்கை காட்பாடி தெற்கு பகுதி செயலாளரும் வேலூர் மாநகராட்சி துணை மேயருமான எம்.சுனில் குமார் அவர்கள் தலைமையில் வட்டச் செயலாளர்கள் டீட்டா சரவணன், ரஜினி, சம்பந்தம், சசிகுமார், கழிஞ்சூர் இளங்கோ பகுதி நிர்வாகிகள் கே.ஏ கண்ணன், கே.எஸ் கண்ணன், சரஸ்வதி முரளி,
விஸ்வநாதன், கே.பி.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் காட்பாடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும் மாநில கலை இலக்கிய பேரவை துணைத் தலைவருமான பொள்ளாச்சி உமாபதி கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தனர்.
இதில் காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னிய ராஜா பொதுமக்கள் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் முன்னதாக அதிமுகவிலிருந்து விலகி இருக்கும் 10 மேற்பட்டோர் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.