வேலூர் மாவட்டம் செதுவாலை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த செதுவாலை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக விழாவில் வருவாய்த் துறையினர் முன்னிலையில் விழா குழுவினர் உறுதிமொழி ஏற்றனர்.
இதில் வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, அண்டை மாநிலமான ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன பங்கேற்ற காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்றன இந்த எருது விடும் திருவிழா இரண்டு சுற்றுகள் நடைபெற்றது.
அதில் குறித்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசாக 60,006, இரண்டாம் பரிசாக 50,005 ரூபாய்யும், மூன்றாம் பரிசாக 40,004 ரூபாயும் நான்காவது பரிசாக 30,003 ரூபாயும் என மொத்தம் 38 பரிசுகள் வெற்றி பெற்ற காளைகளுக்கு வழங்கப்பட்டன இந்த எருது விடும் விழாவை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர் காளைகள் முட்டியதில் 15 மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களுக்கு அங்கே இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர் மேலும் எருது விழும் விழாவை முன்னிட்டு விரிஞ்சிபுரம் பள்ளிகொண்டா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.