BREAKING NEWS

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக அமல்படுத்த வேண்டும் , தனியார் குழுக்களுக்கு வழங்கக்கூடாது.

குடும்ப நல ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக்கொடை ஐந்து லட்சம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் பூர்த்தி செய்ய வேண்டும்.

உதவியாளர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதல்வர் சத்துணவு ஊழியர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் சார்பில் 200க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

CATEGORIES
TAGS