வேலூர் மாவட்ட காவல்துறையில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றபட்ட இருசக்கர வாகனங்களை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.

வேலூர் மாவட்ட காவல் துறையில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றபட்ட இருசக்கர வாகனங்கள் (Scrap) உடைக்க தகுதியுள்ள நிலையில் உள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் அவர்களின் உத்தரவின்படி வரும் 29.05.2025-ம் தேதி காலை 09.00 மணி முதல் வேலூர் நேதாஜி ஸ்டேடியம் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் வைத்து பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
வாகனத்தை ஏலம் எடுக்க பார்வையிடுவோர் ரூ.100/-ஐ நுழைவு கட்டணமாக செலுத்திய பின்னரே வாகனங்களை ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவர்.
ஏலம் எடுக்கப்பட்ட இரண்டு சக்கர வாகனத்திற்கு ஏலத்தொகையுடன் கூடுதலாக 12% வரியும் (GST) சேர்த்து செலுத்தப்பட வேண்டும். ஏலம் எடுக்கப்பட்ட வாகனத்திற்கு இரசீது வழங்கப்படும். அந்த இரசீதே வாகனத்திற்குண்டான உரிமை ஆவணம் ஆகும் என்பதை வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
CATEGORIES வேலூர்