BREAKING NEWS

வேலூர் ஸ்ரீபுரத்தில் கிரீட பாரதி மாதா புரஸ்கார் விருது வழங்கும் விழா!!

வேலூர் ஸ்ரீபுரத்தில் கிரீட பாரதி மாதா புரஸ்கார் விருது வழங்கும் விழா!!

வேலூர் ஸ்ரீபுரத்தில் கிரீட பாரதி மாதா புரஸ்கார் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நாராயணி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பாலாஜி
வேலூர் அடுத்து ஸ்ரீபுரம் சக்தி அம்மாவின் நாராயணி திருமண மண்டபத்தில் கிரீட பாரதிஜீஜா மாதா புரஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடந்தது.

 

இதன் வேலூர் மண்டல ஒருங்கிணைப்பார் பாமாகுமாரி வரவேற்றார். வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பாலாஜி விருதுகளை வழங்கினார். தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் அசோக், துணைத்தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

 

பரதநாட்டியம், யோகசனம் நிகழ்ச்சி நடந்தது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தமிழக ஹாக்கி போட்டியில் தங்கம் பதக்கம் வென்றனர். அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது வேலூர் விஐடி உடற்கல்வி இயக்குநர் தியாக சாந்தன் நன்றி கூறினார்.

 

 செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.

CATEGORIES
TAGS