BREAKING NEWS

வைகை அணையில் இருந்து 2500 கனஅடி தண்ணீர் திறப்பு; அணை நீர்மட்டம் வேகமாக குறைகிறது.

வைகை அணையில் இருந்து  2500 கனஅடி தண்ணீர் திறப்பு;  அணை நீர்மட்டம் வேகமாக குறைகிறது.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டபூ ர்வீக பாசன பகுதிகளுக்காக வைகை அணையில் இருந்து 2500 கன அடி தண்ணீர் திறப்பு நீர்வரத்து இல்லாததால் அணை நீர்மட்டம் வேகமாக சரிகிறது.

 

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் தற்போது 64 அடியாக உள்ளது. வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறத.

 

இந்நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனப் பகுதி விவசாயிகள் தங்கள் பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

 

அவர்களின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து ஒரு வாரத்திற்கு ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினருக்கு அரசு உத்தரவிட்டது. மொத்தமாக 1533 மில்லியன் கனஅடி தண்ணீரை 7 நாட்களில் வழங்க உத்தரவிடப்பட்டது.

 

இதனையடுத்து இன்றுக்காலை வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2500 கனஅடி தண்ணீர் ஆற்றுப்படுகை வழியாக திறக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது வரையில் போதுமான அளவு பெய்யாத காரணத்தால் நீர்நிலைகளுக்கான நீர்வரத்து குறைந்தே காணப்படுகிறது.

 

குறிப்பாக வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை பெய்யவில்லை. இதன்காரணமாக வைகை அணை நீர்மட்டம் சரிந்து கொண்டே வரும் சூழ்நிலையில் தற்போது கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் வைகை அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

 

வைகை அணை நீர்மட்டம் சரியத் தொடங்கியுள்ளதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS