BREAKING NEWS

வைகை அணை மீனவர்கள் நீர் தேக்கத்தில் தண்ணீரில் இறங்கி ஆர்ப்பாட்டம்.

வைகை அணை மீனவர்கள் நீர் தேக்கத்தில் தண்ணீரில் இறங்கி ஆர்ப்பாட்டம்.

தென் மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமான வைகை அணை கடந்த 1958 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

 

மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் குடிநீருக்கும் பாசனத்திற்கும் ஆதாரமாக விளங்கி வரும் வைகை அணை நீர் தேக்கத்தில் மீன்வளத்துறை சார்பாக கடந்த மாதம் வரை மீன்கள் பிடிக்கப்பட்டு வந்தன.

 

இந்நிலையில் கடந்த மாதம் வைகை அணை நீர் தேக்கத்தில் மீன் பிடிக்கும் உரிமையை 82 லட்சத்திற்கு கோவையை சார்ந்த தனியார் ஒருவருக்கு தமிழக அரசு டெண்டர் விட்டது.

மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் ஒப்பந்ததாரர் ஜிலேபி வகை மீன்களை 40 ரூபாய்க்கும் கட்லா மிறுகால் ரோகு உள்ளிட்ட மற்ற வகை மீன்களை 35 ரூபாய்க்கும் விற்பனை செய்வது என விதிமுறை நிர்ணயிக்கப்பட்டது.

 

 

கலந்த ஒரு மாதத்திற்கு மேலாக மீன்களை பிடிக்காமல் இருந்ததால் மீன்கள் வைகை அணையில் பல்கி பெருகியிருந்தன.

இந்நிலையில் கடந்த வாரம் மீன்பிடித்த மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூன்று டன்கள் வரை மீன்கள் கிடைத்தன. இதனால் மீன்கள் பிடித்த மீனவர்களுக்கு நல்லலாபம் கிடைத்தது. இதைடுத்து ஒரு டன் அளவிற்கு மட்டும் மீன்கள் கிடைக்கின்றன. இதனால் மீனவர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ள நிலையில் இது குறித்து ஒப்பந்ததாரர்களும் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

 

தங்களுக்கு பிடிக்கும் மீன்களை பாதி அளவுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் ஒப்பந்ததாரர் அதற்கு உடன்படவில்லை. இதையடுத்து இன்று50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் வைகை அணை நீர்தேக்கத்தில் தண்ணீர் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

வைகை அணையில் பிடிக்கும் மீன்களை தங்களுக்கு பாதி அளவு வழங்க வேண்டும் என்றும், மீன்வளத்துறை மூலம் முன்பு பிடிக்கப்பட்டபோது இருந்த நடைமுறையே தொடர வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்து வைகை அணையில் இறங்கி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது

CATEGORIES
TAGS