வைகோ மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பத்திரிகை ஆசிரியர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கம் நிர்வாகிகள்.

வைகோ மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பத்திரிகை ஆசிரியர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கம் நிர்வாகிகள். நன்றி மறந்த வைகோ, குண்டர்களை வைத்து பத்திரிகையாளர்களை தாக்கியதால் கைது செய்யப்பட வேண்டும்.
நன்றி மறந்ததால் 1993ஆம் வருடம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டு, 1994 இல் மதிமுக எனும் கட்சியை துவங்கி, அன்று முதல் இன்று வரை மக்கள் மத்தியில் வைகோவின் முகம் தெரிய காரணம், அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகம் தான்,
வாரிசு அரசியல் என திமுகவை குற்றம் சாட்டிய நீங்கள், இப்ப நீங்கள் என்ன அரசியல் செய்கிறீர்கள் ? எப்படி உங்கள் மகன் துரை வைகோ திடீரென மதிமுகவில் முதன்மை செயலாளர் ஆகவும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆனது எப்படி ?
உங்கள் கட்சியில் மல்லை சத்யா அவர்கள், நீண்ட காலமாக உள்ளார், இதுவரை அவரை பாராளுமன்ற உறுப்பினர் ஆக ஆக்காதது ஏன் ?
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 09.07.2025 ம் தேதி அன்று விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் நடந்த மதிமுக கூட்டத்தில், செய்தி சேகரிக்க வந்திருந்த செய்தியாளர்களை காலிப் பயலுக, என்றும் அறிவு இருக்கா ? என்றும், கேமராவை பிடுங்கி அடிங்க என மேடையில் பேசி,
செய்தியாளர்களை அடித்து காயப்படுத்தி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரக் காரணமாக இருந்த நன்றி கெட்ட வைகோ அவர்களையும்,
மற்றும் செய்தியாளர்களை தாக்கிய மதிமுக குண்டர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிற்கவைக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்,
தண்டனை கிடைத்தால் தான் மீண்டும் இந்த மாதிரி சம்பவங்கள் செய்தியாளர்களை திட்டுவது, தாக்குவது போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் இனி நடக்காது,
ஆகையால் விரைவில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டம் தமிழ்நாட்டில் கொண்டுவர வேண்டும் எனவும்,
பத்திரிகையாளர்களை தாக்கி, உடலில் காயம் ஏற்பட காரணமாய் இருந்த வைகோ மற்றும் அவருடைய தொண்டர்களை சட்டம் சட்டப்படி தண்டிக்க வேண்டும்,
என மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் அவர்களையும், தமிழ்நாடு முதல்வர்
மு.க.ஸ்டாலின் அவர்களையும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த சம்பவத்திற்கு அச்சு ஊடகங்கள் மற்றும் சிறு பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கங்கள் புகார்கள் கொடுத்து வரும் நிலையில்,
அனைத்து காட்சி ஊடகங்களும் இதற்கு முழு ஆதரவளித்து, குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வாங்கித் தர துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். த.மு.தருமராஜா D, Astro
ஆசிரியர் – மக்கள் விருப்பம் இதழ்.
தலைவர் – ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் – தமிழ்நாடு.
வி.எம்.தமிழன் வடிவேல் ஆசிரியர் – தென்னிலை கதிர் இதழ்,
மாநிலத் தலைவர் – ஊடக உரிமை குரல் பத்திரிகையாளர்கள் சங்கம்,
ஆ.வேல்முருகன்
மாநில தலைவர் – அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கம்,
வி.ரஞ்சன்
ஆசிரியர் – நீதியின் பாதை இதழ்,
மாநில துணைத் தலைவர் – ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கம் தமிழ்நாடு,
D.பிரபாகரன்
நிர்வாக ஆசிரியர் – காவலர் பார்வை இதழ், மாநில பொதுச் செயலாளர் – வின் பத்திரிகையாளர்கள் சங்கம்,
வி.யுவராஜ்
ஆசிரியர் – கடல் துளிகள் இதழ்,
மாநில துணைத்தலைவர் – வின் பத்திரிகையாளர்கள் சங்கம்,
இ.லட்சாபதி( எ) லட்சியவேந்தன்
ஆசிரியர் – நான்கு திசை மலர் தின இதழ்,
மாநில செயலாளர் – தமிழ்நாடு தலைமைச் செயலக பிரஸ் மீடியா அசோசியேஷன்,
கே.ஜெகதீசன்
ஆசிரியர் – பகுஜன் குரல் இதழ்,
மாநிலத் தலைவர் – வெகுஜன பத்திரிகையாளர் சங்கம்.
பி.எம்.மீடியா மேனேஜிங் டைரக்டர் ஜெயக்குமார்,
ரிபப்ளிக் டுடே தமிழ் மேனேஜிங் டைரக்டர் நெல்சன் சிமியோன்,
உள்ளிட்ட ஏராளமான பத்திரிகையாளர்கள் மற்றும் சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.