ஶ்ரீ இராமலிங்க செளடாம்பிகை திருக்கோயிலில் வைகாசி மாச கொடை விழா கத்தி போடும் நிகழ்ச்சி..

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சாமி தரிசனம் செய்து கத்தி போடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வானரமுட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒட்டமடம் கிராமத்தில் அமைந்துள்ள இராமலிங்க செளடாம்பிகை திருக்கோயிலில் வைகாசி மாச கொடை விழாவை முன்னிட்டு பக்தர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்கள் கத்தி போடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து… கோவில்பட்டி அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் வைகாசி மாச கொடை விழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் நீலகண்டன், மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.