BREAKING NEWS

ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளியில் பள்ளிகள் நிறுவிய ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசளிப்பு!

ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளியில் பள்ளிகள் நிறுவிய ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசளிப்பு!

வேலூர் ஸ்ரீபுரம், ஸ்ரீ நாராயணி பள்ளியில் ஸ்ரீ சக்தி அம்மாவின் அருளாசியுடன் பள்ளிகள் நிறுவிய ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது.

ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பள்ளிகளில் நிறுவிய ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் தமிழ், கணினி, கணிதம், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், அதனை பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் தங்க காசினை பரிசாக வழங்கி அவர்களை கௌரவித்தார்.

அத்துடன் பள்ளியில் கற்பிக்கப்படும் ஆன்மீக நெறியுடன் கல்வியை பற்றியும் புகழ்ந்து பேசினார்.

இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் மென்மேலும் சாதனைகள் பல படைத்து ஸ்ரீ நாராயணி பள்ளியின் வரலாற்றில் இடம் பெற வேண்டும் என்று வாழ்த்தினார். ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் இயக்குனர் மற்றும் தாளாளர் எம்.சுரேஷ் பாபு பேசுகையில்: மாணவர்கள் ஆன்மீக நெறியில் வளர்ந்தால் ஒழுக்கம் வரும் ஒழுக்கம் வந்தால் விடாமுயற்சி வரும்.

விடாமுயற்சி வந்தால் தேர்வில் வெற்றி கிடைக்கும் என்று மாணவர்களை வாழ்த்து பேசினார். இந்த விழாவில் ஸ்ரீ நாராயணி பள்ளி மாணவர்கள் கர்நாடக இசை, பாடல்கள், பரதநாட்டியம், யோகா, சிலம்பம், கராத்தே ஆகிய கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திக் காண்பித்தனர்.

இந்த விழாவில் பள்ளி தலைமை ஆலோசகர் மற்றும் இரு பள்ளி முதல்வர்கள், பள்ளி நிர்வாக அலுவலர் ,துணை முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள கலந்து கொண்டு சிறப்பித்தனர். நன்றி நவிலல் கூறியதும் தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது..

CATEGORIES
TAGS