BREAKING NEWS

ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா- கூடுதல் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு கமிஷனர் பேட்டி.

ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா- கூடுதல் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு கமிஷனர் பேட்டி.

திருச்சி,

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, பகல் பத்து – இராப்பத்து நிகழ்வு மட்டுமன்றி சொர்க்கவாசல் திறப்பின் போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 

வருகிற ஜனவரி 2ஆம் தேதி அதிகாலை வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பின் போது மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.

 

திருக்கோவில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உட்பட 92 கேமராக்கள் கூடுதலாக நிறுவப்பட்டு மொத்தம் 210 கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட உள்ளது. கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு போலீசாரின் உதவியுடன் கூட்ட நெரிசலை கண்காணித்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இரண்டு ஆண்டுகளாக கொரோனா இருந்ததால் பொதுமக்கள் அனுமதிக்கப் படவில்லை, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முழு அளவில் மக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட உள்ளது.

 

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் விழா நாட்களில் காவேரி பாலத்தில் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. சொர்க்கவாசல் திறப்பின் போது 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட உள்ளதாகவும் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS