BREAKING NEWS

ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா முன்னிட்டு மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா முன்னிட்டு மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் 108 திவ்ய தேசத்தில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயில் 1308 படிகள் கொண்ட பெரிய மலை மீது அமைந்துள்ள சன்னிதியில் நரசிம்மர் யோக நிலையில் அருள்பாலிக்கிறார் மற்றும் சிறிய மலையில் யோகஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

 

 

இக்கோயிலின் பிரம்மோற்சவம் உள்ளிட்ட அனைத்து உற்சவங்களும் சோளிங்கர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள உற்சவர் பக்தோசித பெருமாள் கோயிலில் நடைபெறுகிறது. இந்நிலையில் வருடாந்திர சித்திரை பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரம்மோற்சவத்தின் போது தினந்தோறும் சேஷ வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் உற்சவர் பக்தோசிதப்பெருமாள் மாட வீதிகளில் வலம் வந்து அருள் பாலிக்க உள்ளார். இந்நிலையில் வீதியுலாவிற்கு இடையூராக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடந்தது.

 

 

வருவாய் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் 8 மாட வீதிகளுக்கு சென்று வீதியுலாவிற்கு இடையூராக இருந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினார்கள். அப்போது ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

CATEGORIES
TAGS