ஸ்ரீ விநாயகர் ஆலய புனவர்த்தன ஜீர்ணணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோவில் குளம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ நினைத்த காரியத்தை முடிக்கும் விநாயகர் ஆலய புனவர்த்தன ஜீர்ணணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
திருவிழா 30 5 23 காலை 6 மணி அளவில் ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, தீப லட்சுமி பூஜை, நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோம பூஜைகள் நடந்தது மாலை ஆறு மணி அளவில் தாமிரபரணி நதியிலிருந்து புனித நீர் எடுத்து வந்து ஊரை சுற்றி வாஸ்து பூஜை பிரவேசப் பலி போன்ற சிறப்பு பூஜைகள் செய்து முதல் கால பூஜைகள் தொடங்கின.
பின்னர் 31ஆம் தேதி இரண்டாம் காலம் மூன்றாம் காலம் பூஜை நடந்தது இன்று அதிகாலை 7 .31 .முதல் 9 மணி அளவில் விமானம் மற்றும் மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது பின்னர் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெறும் இன்று மாலை சுப்பிரமணியருக்கு திருக்கல்யாண வைபவமும் நினைத்த காரியத்தை முடிக்கும் விநாயகப் பெருமானுக்கு திருவீதி உலாவும் நடைபெறும்.
கும்பாபிஷே விழாவில் அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள அனைத்து பக்த பெருமக்கள் மற்றும் கோவில் குளம் ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை சர்வ சாதகம் உதயத்தூர் திருநாவுக்கரசு குருக்கள் செய்து வைத்தார் கும்பாபிஷேக விழாவினை விழா கமிட்டினர் ஏற்பாடு செய்து வைத்தனர்.