1 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் பூம்புகார் எம் எல் ஏ கிராம சாலை பணி துவக்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், தரங்கம்பாடி தாலுக்கா திருச்சம்பள்ளி வல்லம் ஊராட்சி முதல் முக்கறும்பூர் ஊராட்சி வரை ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறப்பு சாலை 3 கிலோ மீட்டர் வரையிலான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செம்பனார்கோவில் ஒன்றிய செயலாளர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா ஒன்றிய துணைப் பெருந்தலைவர் பாஸ்கர் ஊராட்சி மன்ற தலைவர்கள் பூக்கடை குமார் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி ஜேசிபி இயந்திரத்தை இயக்கி துவக்கி வைத்து பேசினார்.
தொடர்ந்து பொதுமக்களிடம் எம்எல்ஏ பேசுகையில் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 150 கிலோ மீட்டருக்கு ரூ.24 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு கிராமப்புற சாலைகளை பணிகள் துவக்கப்பட உள்ளது. அந்த வகையில் திருச்சம்பள்ளி வல்லம் ஊராட்சி முதல் முக்கரும்பூர் ஊராட்சி வரை பணி துவக்க விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளது என எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் மு.ஞானவேலன், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் அமுர்த.விஜயகுமார், எம்.அப்துல் மாலிக், ஒன்றிய குழு உறுப்பினர் சாந்தி வேல்முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் விஸ்வநாதன், ராஜா, ராஜலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் திருச்சம்பள்ளி வல்லம், முக்கறும்பூர் ஊராட்சி கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.