BREAKING NEWS

10 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி டிஎன்டி கூட்டமைப்பினர் நூதன முறையில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

10 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி டிஎன்டி கூட்டமைப்பினர் நூதன முறையில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக 10 சதவீத இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி இன்று காலை டிஎன்டி கூட்டமைப்பினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

தேனி ஆட்சியர் நுழைவாயில் முன்பாக இன்று காலை டிஎன்டி கூட்டமைப்பு சார்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் நாகராஜன் அவர்கள் தலைமையில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள், தரையில் வாழை இலையை போட்டு, இலையில் சோறை வைத்து, அதில் பூசணிக்கா வைத்து, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்காதே என்று கூறி கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

 

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை மனுவை தேனி ஆட்சியர் முரளிதரனிடம் வழங்கினார்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )