10 ஆம் ஆண்டு ஆசிரியச் செம்மல் விருது வழங்கும் விழா.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் ஆசிரியச் செம்மல் விருது வழங்கும் விழா மதிமுக மாநில இளைஞர் அணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்றது.
குத்தாலம் பேரூர் செயலாளர் ஆ.கருணாநிதி வரவேற்புரையாற்றினார்.
ஒன்றிய செயலாளர்கள் சி.கொளஞ்சி ,
( செம்பனார்கோவில்) ஆர்.சரவணன்,
( சீர்காழி மேற்கு) , எஸ்.குமார்,
(குத்தாலம் கிழக்கு) மறுமலர்ச்சி இரவி ( மயிலாடுதுறை)
ப.விக்ரமன் ( சீர்காழி மேற்கு)
தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜி.எஸ்.சுப்மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விருது வழங்கும் விழாவினை கழக துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை இரா.முருகன் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தேர்வு செய்யபட்ட சிறந்த ஆசிரியர்களுக்கு அரசியல் ஆய்வு மையச் செயலாளர் மு.செந்திலதிபன் ஆசிரியச் செம்மல் விருது வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
இதில் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் இ.மார்கோனி, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்.இரா.செந்தில்செல்வன், கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் ஆரூர்.சீனிவாசன் உள்ளிட்ட சமூக நல அமைப்புகளைச் சார்ந்தவர்கள், தமிழ் அமைப்புகளின் சான்றோர்கள்,மற்றும் அனைத்து கட்சியினரும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
தனித்துவமாக பணி புரிந்துவரும் ஆசிரியர்கள் கோ.சிவாமிநாதன் , கா.சரவணன், மு.மீனாட்சி, கி.இரா.மகேஷ், ஆ.இராஜகுமாரன், வி.சுந்தர்ராமன், ஞா.ஸ்ரீதர், மு.மகாதேவி, செ.மன்னர்மன்னன், வை.செந்தாமரை ஆகியோருக்கு ஆசிரியச் செம்மல் விருதுகள் வழங்கப்பட்டது.
மாநில அளவில் கட்டுரை போட்டியில் முதல் இடம் பிடித்த ஏ.வி.சி.கல்லூரி மாணவி க.அபிநயா விற்கு ஒளிச்சுடர் விருது வழங்கப்பட்டது.
குத்தாலம் முத்தமிழ் அறிவியல் மன்றத்தின் செயலாளர் விழிகள் சி.இராஜ்குமார் விருது பெற்ற ஆசிரியர்களின் சிறப்பை கூறி வாழ்த்துரை வழங்கினார்.
குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.என்.வாசு நன்றியுரையாற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
