10 முக்கிய கோரிக்கை மனுவை இன்று தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரில் வழங்கினார் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி. கே. ஜி. நீலமேகம்.

தஞ்சை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய 10 முக்கிய கோரிக்கை மனுவை இன்று மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரில் வழங்கினார் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி. கே. ஜி. நீலமேகம்.
நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான 10 முக்கிய கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்திட முதலமைச்சர் அறிவுறுத்திய படி தஞ்சை தொகுதிக்குட்பட்ட முக்கிய கோரிக்கைகளான காட்டுத்தோட்டத்தில் வேளாண் கல்லூரி அமைத்திட வேண்டும்,
மேரிஸ் கார்னர் பாலத்தை இராமநாதன் மருத்துவமனை வரை நீட்டிக்க வேண்டும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் இன்று வழங்கினார் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம்.
இது குறித்து பேட்டி அளித்த சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் டி. கே.ஜி.நீலமேகம்.
முதலமைச்சரின் உத்தரவுப்படி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இன்று வழங்கி,..முதலமைச்சர் அவர்கள் நிச்சயம் கனிவுடன் பரிசீலித்து உத்தரவிட்டுள்ளார் என்றார்.