10.5 % சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பிய பாமகவினர்.
வன்னியருக்கு 10.5% இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு பாமக சார்பில் அரியலூரில் கடிதம் அனுப்பிய நிகழ்வு நடைபெற்றது.
அரியலூரில் பாமக கௌரவத் தலைவர் ஜி கே மணி அவர்கள் தலைமையில் வன்னியர்களுக்கு 10 புள்ளி ஐந்து சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி அரியலூரில் உள்ள தபால் அலுவலகத்தில் பாமக மாவட்ட செயலாளர் கேபிஎன் ரவி முன்னிலையில் கடிதங்கள் அஞ்சல் செய்யப்பட்டன.
இதில் கிராமங்கள் தோறும் வீடு வீடாக சென்று வன்னியர்களிடத்தில் எடுத்துரைத்து அவர்களிடத்தில் கையெழுத்து பெற்று சுமார் 5000 கடிதங்கள் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு அரியலூர் தபால் நிலையத்தில் அஞ்சல் செய்யப்பட்டன.
இதில் பாமக மாவட்ட தலைவர் சின்னதுரை பெரம்பலூர் மாவட்ட செயலாளர் உலகசாமிதுரை ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பரசுராமன் உள்ளிட்ட பாமக மற்றும் வன்னியர் சங்க மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.