100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்த கல்லூரி மாணவர்கள் பேரணி

நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமை ஆற்றி வாக்குகள் செலுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.. இதன் ஒரு பகுதியாக 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணியில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் வரை 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக நடந்து சென்றனர். மேலும் வாக்களிப்போம் வாக்களிப்போம் ஜனநாயகத்தை காப்பாற்றுவோம் என கோசங்களை எழுப்பியவாறு கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தினார்கள். இதில் போக்குவரத்து உதவி கமிஷனர் சுந்தர்ராஜன் பேரணியை தொடங்கி வைத்தார் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராமதுரை மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் ஆர்வமுடன் பேரணியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
