100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி அறநூறு ரூபாய் கூலி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய தொழிலாளர் மையத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினரும் விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளருமான சின்னதுரை தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி கூலி 600 ரூபாயாக வழங்க வேண்டும். வீடு இல்லாத அனைவருக்கும் பட்டாவுடன் 10 லட்சம் செலவில் வீடு கட்டி தர வேண்டும். பேரூராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தை விரிவு படுத்த வேண்டும், கேரளாவை போல் விவசாய தொழிலாளர்களுக்கு தனி சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெண் விவசாய தொழிலாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.