17 வயது சிறுமிக்கும் கட்டாய திருமணம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு.

செய்தியாளர் வி ராஜா.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் பூவந்தி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் வயது 27 என்பவருக்கும் கல்லல் அரண்மனை சிறுவயல் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இரு குடும்பத்தாரும் கட்டாயப்படுத்தி குழந்தை திருமணம் செய்து வைத்ததாக சைல்டுலைண் மூலம் தகவல் வரபெற்றதை தொடர்ந்து,..
இரு குடும்பத்தார்கள் மீதும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உத்தரவு படி சமூக பணியாளர் திரு சத்தியமூர்த்தி அவர்கள் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதை தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்தவர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டம் 2012-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் குழந்தை திருமணத்தை நடத்திவைத்தவர்கள் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2006ல் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
