BREAKING NEWS

2 லட்சம் கையூட்டுப் பெற்ற பஞ்சாயத்து தலைவர் லஞ்சப் பணத்துடன் கைது

2 லட்சம் கையூட்டுப் பெற்ற பஞ்சாயத்து தலைவர் லஞ்சப் பணத்துடன் கைது

மனை பிரிவுகளுக்கு அப்ரூவல் வழங்க ரூ. 2 லட்சம் கையூட்டுப் பெற்ற பஞ்சாயத்து தலைவர்.. லஞ்சப் பணத்துடன் விஜிலென்ஸ் போலீஸ் கையில் கையும் களவுமாக சிக்கியுள்ளார்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் சீனிவாசன் என்பவர் மேல்சான்றோர்குப்பம் என்ற கிராமத்தில் 7 ஏக்கர் நிலத்தில் வீட்டுமனை அமைப்பதற்காக முயற்சி செய்துள்ளார். ஆனால் வீட்டுமனை அங்கீகாரத்திற்கு ரூ.12 லட்சம் லஞ்சம் கேட்டதாக ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் எழுந்தது.

இது தொடர்பான புகாரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஊராட்சி மன்ற தலைவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

வீட்டு மனைக்கு அங்கீகாரம் பெற சில ஊர்களில் லஞ்சம் கேட்பது நடப்பதாக புகார்கள் உள்ளது. அப்படி லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு கப்பம் கட்டிவிட்டு, சிலர் சத்தம் இல்லாமல் வீட்டு மனைக்கு அங்கீகாரம் வாங்கி வீடுகளை விற்று இருப்பார்கள். ஆனால் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் வீட்டு மனை அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்த ரியல் எஸ்டேட் அதிபர் லஞ்சம் கேட்டதாக கூறப்படும் பஞ்சாயத்து தலைவருக்கு பாடம் கற்பித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சீனிவாசன் என்பவர் ஆம்பூர் அடுத்த மேல்சான்றோர்குப்பம் ஊராட்சிக்கு பின்புறம் அமைந்துள்ள 7 ஏக்கர் நிலத்தில் வீட்டுமனை அமைப்பதற்காக ஊராட்சி மன்ற தலைவர் (40 வயதாகும்) சிவக்குமாரை அணுகியுள்ளார்.

ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் டி.டி.சி.பி அங்கீகாரம் பெறுவதற்காக சீனிவாசனிடம் ரூ.12 லட்சம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. அதன்படி சீனிவாசன் கடந்த ஓரு ஆண்டில் ரூ.10 லட்சம் கொடுத்தாராம். இந்த நிலையில் மீண்டும், மீண்டும் பணம் கேட்டு அவர் மிரட்டினாராம்.

இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் திருப்பத்தூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்கள் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜீவ்விடம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய 2 லட்சம் ரூபாய் நோட்டுகளை சீனிவாசனிடம் கொடுத்து லஞ்சம் கேட்ட ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமாரிடம் கொண்டு சென்று கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவரை பின்தொடர்ந்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், அதன்படி வாணியம்பாடி நியூடவுன் பைபாஸ் சாலைக்கு ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமாரை வரவழைத்து சீனிவாசன் ரூ.2 லட்சம் ரசாயன பொடி கலக்கப்பட்டு லஞ்சப் பணத்தை கொடுத்திருக்கிறாராம்.

அப்போது அங்கு மறைந்திருந்த திருப்பத்தூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜீவ், தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி, சப் – இன்ஸ்பெக்டர் கணேசன் உள்ளிட்ட போலீசார், ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமாரை கைரேகை பதிந்த லஞ்சப்பணத்துடன் கையும், களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.

பின்னர் வாணியம்பாடி பைபாஸ் சாலையின் அருகிலுள்ள நகராட்சி அலுவலகத்திற்கு அவரை அழைத்து சென்று ஒரு அறையில் வைத்து விசாரணை நடத்தினர்.

பின்னர் கைது செய்யப்பட்ட பஞ்சாயத்து தலைவர் சிவக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரின் பரிசோதனைக்கு பின் புகழ் சீட்டு பெற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் அவரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர்.

மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் வீட்டுமனை அங்கீகாரத்திற்கு ரூ.12 லட்சம் லஞ்சம் பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் வாணியம்பாடியில் ஏற்படுத்தியுள்ளது.

செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்

CATEGORIES
TAGS