20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்.

வேலூர் மாவட்டம்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 27 மாத அகவிலைப்படி நிலுவையினை உடனே வழங்கிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்,
ஒப்பந்த ஆசிரியர்களை முறைபடுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேலூர் மாவட்ட கிளை சார்பில்,
சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 50 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
CATEGORIES வேலூர்
TAGS இடைநிலை ஆசிரியர்கள்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்பழைய ஓய்வூதிய திட்டம்முக்கிய செய்திகள்வேலூர் மாவட்டம்