20 கிராமங்கள் இரவை பாசன திட்டம் நீர் ஏற்று எந்திரம் பழுதாகி உள்ளதால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை
![20 கிராமங்கள் இரவை பாசன திட்டம் நீர் ஏற்று எந்திரம் பழுதாகி உள்ளதால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை 20 கிராமங்கள் இரவை பாசன திட்டம் நீர் ஏற்று எந்திரம் பழுதாகி உள்ளதால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை](https://aramseithigal.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-22-at-12.00.17-PM-e1669099668463.jpeg)
தஞ்சாவூர், 20 கிராமங்கள் பாசன பயன்பாட்டிற்காக ஒரத்தநாடு அடுத்த ஒக்காநாடு கீழையூரில் உள்ள இரவை பாசன திட்டம் நீர் ஏற்று எந்திரம் பழுதாகி உள்ளதால் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கல்லணை கால்வாய்க்கு உட்பட்ட கண்ணணூர் வாய்க்கால் மூலம் ஒக்காநாடு கீழையூர், வன்னிப்பட்டு, பேரையூர், கீழக்குறிச்சி உள்ளிட்ட 20க்கும் . மேற்பட்ட கிராமங்கள் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த கிராமங்கள் முழுவதும் மேடான பகுதி என்பதால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதித்து வந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு கடந்த 1969ம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதியால் ஒக்காநாடு கீழையூரில் இரவை பாசனத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. நீர் ஏற்று எந்திரம் மூலம் மேடான வாய்க்கால் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு விவசாயம் நடைப்பெற்று வந்தது.
‘இந்த நிலையில் எந்திரங்கள் பழுதானதால் இரவை பாசன திட்டம் செயல்படாமல் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த 20 கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதாக வேதனை தெரிவிக்கும் விவசாயிகள் இரவை பாசன திட்டத்திற்கு நிதி ஒதுக்கி நவின நீர் ஏற்று எந்திரங்கள் கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்தி வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என ஒக்காநாடு கீழையூர் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.