26 மீனவ கிராமம் மீனவர்கள்: வாழ்வாதாரம் பாதிப்பு.
மயிலாடுதுறை: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்மண்டலம், கடல் சீற்றம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 26 மீனவ கிராமம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து கடல் சீற்றம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் உள்ள 26 மீனவ கிராம மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் உள்ளனர்.
தரங்கம்பாடி, சந்திரபாடி, திருமுல்லைவாசல், பழையாறு, பூம்புகார் பகுதிகளுக்கு சென்ற மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு மற்றும் காவல் நிலைய போலீசார் 26 மீனவ கிராமங்களை சேர்ந்த விசைபடகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவோ, கடலில் தங்கி மீன்பிடிக்கவோ வேண்டாம் எனவும், மேலும் தங்கள் படகுகளையும், உடமைகளையும் பத்திரமாக வைத்துகொள்ளுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களுக்கு சொந்தமான 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 5000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், நாட்டுப் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி, சந்திரபாடி, திருமுல்லைவாசல், பழையாறு, பூம்புகார் பகுதிகளுக்கு சென்ற மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு மற்றும் காவல் நிலைய போலீசார் 26 மீனவ கிராமங்களை சேர்ந்த விசைபடகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவோ, கடலில் தங்கி மீன்பிடிக்கவோ வேண்டாம் எனவும், மேலும் தங்கள் படகுகளையும், உடமைகளையும் பத்திரமாக வைத்துகொள்ளுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களுக்கு சொந்தமான 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 5000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், நாட்டுப் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.