28 சவரன் தங்க நகைகள் கொள்ளை; பூட்டை உடைக்காமல் நூதன முறையில் திருடிய கொள்ளையர்கள். கள்ளச்சாவி போட்டு கொள்ளையடிக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை.
ஆம்பூர் அருகே தோல் தொழிற்சாலை தொழிலாளி வீட்டில் 28 சவரன் தங்க நகைகள் கொள்ளை.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த காட்டுவெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் வாணியம்பாடியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நிலையில் இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர் அவர்களின் மூன்று மகள்கள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று இருந்த நிலையில் நாராயணனின் மனைவியும் 100 நாள் வேலைக்குச் சென்றுள்ளார்.,
வழக்கம்போல் நேற்று மாலை நாராயணனின் குடும்பத்தினர் அனைவரும் வீடு திரும்பிய நிலையில் வீட்டிலிருந்த பீரோ திறந்து இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக பீரோவை திறந்து பார்த்ததில் நாராயணன் தனது மகள்களின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 28 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து உடனடியாக நாராயணன் உமராபாத் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் காவல்துறையினர் கொள்ளைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டின் கதவுகள் உடைக்கப்படாமல் கொள்ளையர்கள் வீட்டுக்குள் எவ்வாறு புகுந்து பீரோவை திறந்து நகைகளை கொள்ளை அடித்தனர்.,
கொள்ளையர்கள் கள்ளச்சாவி பூட்டை திறந்து கொள்ளையடித்தனரா அல்லது வேறு ஏதேனும் முறையில் கொள்ளையடித்தனரா என தடவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரிக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.