BREAKING NEWS

30 ஆண்டுகளாக கிராம நத்தத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டை பக்கத்து வீட்டுக்காரருக்கு பட்டா வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை!

30 ஆண்டுகளாக கிராம நத்தத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டை பக்கத்து வீட்டுக்காரருக்கு பட்டா வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டரந்தாங்கல் காலனி மற்றும் அஞ்சல், சேந்து கிணறு காலனி பகுதியைச் சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி வளர்மதி. இவர் கடந்த 30 ஆண்டுகளாக கிராம நத்தம் பகுதியில் வீடு கட்டி தனது அனுபவத்தில் பராமரிப்பு செய்து குடியிருந்து வந்தார்.

இந்நிலையில் பிளாட் எண் 342 /1 -ஐ பக்கத்து வீட்டைச் சேர்ந்த அஞ்சலாவுக்கு வருவாய் துறையினர் பட்டா வழங்கியுள்ளனர்.

 

இந்நிலையில் கடந்த 28. 2.2023 அன்று ஜே சி பி -ஐ கொண்டு வந்து அந்த வீட்டை இடித்து தள்ளி விட்டு அஞ்சலா பெயரில் பட்டா வாங்கியுள்ளதை கூறுகின்றனர்.

இந்நிலையில் காட்பாடி சர்வேயர்கள் வடிவேல் மற்றும் ஆனந்தன் ஆகிய இருவரும் இடத்தை அளந்து தருவதாக கூறிக்கொண்டு வந்து ஏரி புறம்போக்கில் தொகுப்பு வீடு கட்டிக்கொண்டு உள்ள அஞ்சலா என்பவருக்கு சொந்தமான Shop அதுதான் என்று வளர்மதியின் இடத்தை காட்டி விட்டுச் சென்று விட்டனர்.

இதை காரணமாக வைத்துக் கொண்டு தனது பெயரில்தான் பட்டா உள்ளது என்று கூறிக்கொண்டு ஜே சி பி-ஐ கொண்டு வந்து ஹாலோ பிளாக்கில் கட்டப்பட்ட வீட்டை இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர் அஞ்சலா தரப்பினர்.

ஏற்கனவே தமிழக அரசு அஞ்சலாவுக்கு இரண்டு இடங்களை ஒதுக்கி கொடுத்துள்ளது. அதில் தொகுப்பு வீட்டையும் கட்டியுள்ளார் அஞ்சலா. இந்நிலையில் வளர்மதி குடியிருக்கும் வீட்டையும் எடுத்து கொண்டு அவர்கள் பெயரில் போலிபட்டா வாங்கியுள்ளது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆதலால் அஞ்சலாவுக்கு வழங்கிய போலி பட்டாவை ரத்து செய்து வளர்மதியின் அனுபவத்தில் இருந்து வந்த வீட்டை வளர்மதியின் பெயருக்கே மீண்டும் மாற்றி கொடுக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த 3.3.2025 இல் மனு கொடுத்துள்ளார் வளர்மதி.

ஆனால் அந்த மனு கிடப்பில் கிடக்கிறது. இந்நிலையில் நீ எங்கு வேண்டுமானாலும் சென்று சொல்லிக் கொள், என்னை எவனாலும் ஒன்றும் செய்ய முடியாது.

இந்த இடத்தையும் நான் காலி செய்ய மாட்டேன் என்று அஞ்சலா தரப்பினர் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த இடத்தில் வாழை மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனர் இப்படி அடாவடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் அஞ்சலா தரப்பினர் என்று சொன்னால் அது மிகையாகாது.

ஆதலால் இந்த பகுதியில் கள ஆய்வு நடத்தி இந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பதை விரிவாக விசாரணை நடத்தி முடிவு எடுக்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்மதியின் அனுபவத்தில் உள்ள இடத்தை போலியான பட்டா தயார் செய்து வைத்துக் கொண்டு பட்டாவை என்னிடம் காண்பிக்க இயலாது என்று கூறிக்கொண்டு அது தன்னுடைய இடம் என்றும் சவால் விடுகின்றனர் அஞ்சலா தரப்பினர்.

அத்துடன் இதை கேட்கச் செல்லும் போதெல்லாம் கொலை மிரட்டலும் விட்டு இருக்கிறார் அஞ்சலா. இந்த இடத்தை சர்வேயர் அளக்க வந்த போது கிராம சிப்பந்தி அதாவது தற்போது ஓய்வு பெற்ற தயாளன் என்பவரும் உடன் வந்துள்ளார்.

மாசிலாமணி என்ற சுப்பிரமணியமும் உடன் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 30 ஆண்டுகளாக வளர்மதியின் அனுபவத்தில் இருந்து வந்த இடத்தை அதாவது 3.25 சென்ட் இடத்தை 700 சதுர மீட்டர் மாட்டு கொட்டகையாக பயன்படுத்தி வந்துள்ளார்.

இப்படி 45 ஆண்டுகளாக அனுபவத்தில் உள்ள இடத்தை ஹாலோ பிளாக்கில் கட்டப்பட்டிருந்த கட்டடத்தில் குடியிருந்து வருகிறார் வளர்மதி. ஆனால் அஞ்சலா இதுவும் போதாமல் அருகில் உள்ள வளர்மதியின் இடத்தையும் போலிப் பட்டா செய்து தனது பெயரில் மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை சரி செய்து தரவேண்டிய வருவாய்த்துறையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் காட்பாடி வட்டாட்சியர் ஆகியோர் கண்டும் காணாமல் விட்டுவிட்டனர்.

இந்த காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவைப் பிரிவில் பணியாற்றும் சர்வேயர் வடிவேல் மற்றும் ஆனந்தன் ஆகியோரால் இந்த குழப்பம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இது உனது இடம் இல்லை என்று வளர்மதியிடம் இந்த சர்வேயர்கள் கூறியதால் இந்த பிரச்சனை தொடர ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏரி புறம்போக்கை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளார் அஞ்சலா.

அந்த வீட்டை இடிக்காமல் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தாமல் பட்டா இடத்தில் இருந்த வீட்டை பட்டப்பகலில் ஜேசிபி வைத்து இடித்துள்ளார் அஞ்சலா. இவர் மீது இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போலி பட்டா பதிவு செய்ததற்கும் நடவடிக்கை இல்லை. அஞ்சலா வீடு அருகில் இருந்தும் அவருக்கு பட்டா தந்தது எப்படி என்பது புரியவில்லை. குறிப்பாக காலி இடத்திற்கு எப்படி பட்டா வழங்கினார்கள் என்பது தான் புரியாத புதிராக உள்ளது. இதனால் வளர்மதிக்கு பட்டா மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அஞ்சலாவுக்கு பட்டா வழங்கப்பட்டது 1997இல் என்பது அதிர்ச்சி தகவலாக உள்ளது.

இப்படி போலிப்பட்டாவை வைத்துக்கொண்டு தனது இடம் என்று வளர்மதியின் இடத்தை சொந்தம் கொண்டாடுகிறார் இந்த அஞ்சலா. தட்டிக்கேட்டால் இவர்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

ஆதலால் மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி 30 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்மதி அனுபவத்திலிருந்த இடத்தை மீண்டும் வளர்மதிக்கு பெற்றுத் தர வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார் பாதிக்கப்பட்ட வளர்மதி.

பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்குமா? நியாயம் கிடைக்குமா? இழந்த இடத்தை அவர் மீண்டும் மீட்பாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

CATEGORIES
TAGS