BREAKING NEWS

33 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு – வாகன அணிவகுப்பு சுங்கச்சாவடி அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.

33 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு – வாகன அணிவகுப்பு சுங்கச்சாவடி அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் 33 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா தேசிய நெடுஞ்சாலைத்துறை 11ம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடத்த உத்தரவிட்டிருந்த நிலையில்,..

 

 

இன்று பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 33வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன அணிவகுப்பு பேரணி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடத்தி வருகின்றனர்.

 

 

வாகன அணிவகுப்பு பேரணியின் போது பொதுமக்களுக்கு சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது,

 

 

சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும், போக்குவரத்து சிக்னல் விளக்குகளின் படி பயணிக்க வேண்டும் போன்ற போக்குவரத்து விதிகளை ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு எடுத்துரைத்து வாகன பேரணியாக சென்று விழிப்புணர் ஏற்படுத்தினர்.

 

CATEGORIES
TAGS