திருநெல்வேலி கோர்ட் வளாகத்தில் உதவி மையம் திறப்பு.

திருநெல்வேலி வழக்குகளை மின்னணு முறையில் பதிவுசெய்வதற்கான உதவி மையத்தை, திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், முதன்மை மாவட்ட நீதிபதி S.குமரகுரு திறந்து வைத்தார்.
இப்போது எல்லா பதிவுகளும் மின்னனு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், வழக்குகளை மின்னணு முறையில் பதிவு செய்வதற்காக இந்த உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த கோர்ட்வளாகத்தில், இப்போது 2 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் மாவட்டத்தில் உள்ள எல்லா கோர்ட்டுகளிலும் உதவி மையம் தொடங்கப்பட உள்ளது.
இந்த மையங்கள் மூலம் கோர்ட்டுக்கு வரும் மக்கள், வழக்கு தொடர்பாக தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
மேலும், மக்களுக்கு அவர்களின் செல்போன் மூலம் வழக்கு விவரங்கள் குறித்தும், கோர்ட் செயல்பாடுகள் குறித்தும் அறிந்துகொள்ள உதவுவது உட்பட பலசேவைகள் இந்த மையங்கள் மூலம் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
