BREAKING NEWS

அனைத்து தெரு வியாபாரிகளையும் கணக்கெடுத்து ஸ்மார்ட் கார்டு வழங்கி வியாபார சான்று வழங்க கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அனைத்து தெரு வியாபாரிகளையும் கணக்கெடுத்து ஸ்மார்ட் கார்டு வழங்கி வியாபார சான்று வழங்க கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அனைத்து தெருவோர வியாபாரிகளையும் கணக்கு எடுத்து ஸ்மார்ட் கார்டு ,. வியாபார சான்று வழங்க வேண்டும்! தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தெரு வியாபார தொழிலாளர் சங்கம் மாநிலந் தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது*

 

 

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன பிறகும் உழைக்கின்ற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் என்பது உயர்த்தப்படவில்லை. தங்களின் அன்றாட வாழ்க்கைக்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும், குடும்பத்தை நடத்தவும் நாடு முழுவதும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் தாங்கள் வசிக்கின்ற நகரங்கள் உள்ளிட்ட இடங்களில் காய்கறிகள், மளிகை, பிளாஸ்டிக் உள்ளிட்டு வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கடன் வாங்கி தெரு ஓரங்களில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடைஞ்சல் இல்லாத வியாபாரம் செய்து வருகின்றனர். 

 

இவர்களை மாவட்ட, மாநகராட்சி மற்றும் காவல் துறை உள்ளிட்ட நிர்வாகத்தினர் பிழைப்பை நடத்த விடாமல் பல்வேறு நெருக்கடிகளை தந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், ஏஐடியூசி தொழிற்சங்கமும் நாடு தழுவிய பல்வேறு போராட்டங்களை நடத்தி கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் தெரு வியாபார தொழிலாளர் சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் அந்த சட்டத்தை முழுமையாக தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது. இந்த நிலையில் தெருவோரத்தில் வியாபாரம் செய்து வரும் அனைவரையும் விடுபடாமல் கணக்கெடுத்து அவர்கள் வியாபாரம் செய்வதற்கு அடையாள அட்டையாக ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும்.

 

வியாபாரத்திற்கு அத்தாட்சியாக வியாபாரச் சான்று வழங்க வேண்டும் தெரு வியாபார சட்டப்படி குழுக்கள் அமைத்து தேர்தல் நடத்தி பிரதிநிதிகள் நியமித்து அவர்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்.

 

தெரு வியாபார சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு வாடகையாக ஆண்டு கட்டணத்தை சட்டப்படி நிர்ணயிக்க வேண்டும், பாதுகாப்பு அளிக்க வேண்டும், வங்கிகளில் நிர்ப்பந்தம் இல்லாது கடன் வழங்க வேண்டும்,

 

அதேபோல பகுதி ரவுடிகளின் மிரட்டல், மாமூல் வசூலிப்பதில் இருந்தும், காவல்துறையினர், வனத்துறையினர், மாவட்ட, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட நிர்வாகப் பிரிவினர்கள் அவர்களுக்கு நெருக்கடி அளிக்காமல் சுதந்திரமாக வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.

என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது . 

 

 

தஞ்சாவூர் ரெயிலடி முன்பு இன்று காலை 10 மணிக்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தெருவியாபார தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர். பி.முத்துக்குமரன் தலைமைவகித்தார். சங்கமாநில தலைவர் சி. சந்திரகுமார் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

 

ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் க.அன்பழகன், நுகர் பொருள் வாணிபக் கழக சங்க மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜன், அரசு போக்குவரத்து சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் துரை.மதிவாணன், போக்குவரத்து ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பிஅப்பாதுரை, மின்வாரிய சங்க. மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல், பண்ணை சங்க மாநிலத் துணைத் தலைவர் தி.திருநாவுக்கரசு,

 

நூர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் சங்கமாநில தலைவர் அ.சாமிக்கண்ணு , கட்டுமான சங்க துணை தலைவர் பி. செல்வம், சங்க மாவட்ட குழ உறுப்பினர் கே.கல்யாணி, திலகர் திடல் மார்க்கெட் சங்க செயலாளர் கே.மணிகண்டன், வியாபார சங்க நிர்வாகிகள் எம்.பாலமுருகன், கே.அயூப்கான், கே.மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினார்கள் முடிவில் ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா ஆர்ப்பாட்டத்தினை நிறைவு செய்து பேசினார்.

 

இதே போல கும்பகோணம் தலமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.சிவக்குமார் தலைமை வகித்தார்.

 

ஏ ஐ டி யு சி மாவட்டச் செயலாளர் ஆர் தில்லைவனம் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.

 

 

ஆர்ப்பாட்டத்தில் பட்டு கைத்தறி சங்க மாநிலத் தலைவர் மணி மூர்த்தி மின்வாரிய சங்க நிர்வாகிகள் தண்டபாணி, ராஜகோபால்,சட்ட ஆலோசகர்கள். ஐ.ஜார்ஜ், க.மொரார்ஜி, ஓட்டல் தொழிலாளர்கள் சங்க செயலாளர் ஏ.ஜி.பாலன், குடிநீர் சங்க செயலாளர் ஜி.கார்த்திக் உள்ளிட்டார் பங்கேற்றனர். தஞ்சை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் மாநிலந்தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )