BREAKING NEWS

 

தஞ்சாவூர் மாவட்டம், குளிச்சப்பட்டு கிராமத்தை சேர்ந்த பெண் தனது 3 வயது பெண் குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை, தனது கணவர் மலேசியாவிற்கு வேலைக்கு சென்ற நிலையில், அவரது தம்பி வாங்கிய கடனுக்கு கந்துவட்டி போட்டு மலேசியாவில் தனது கணவரை அடைத்து வைத்து அடித்து, வீட்டு பத்திரத்தையும், நிலத்தின் பத்திரத்தையும் கேட்டு மிரட்டுவதாகவும், தனது கணவரை மீட்டுத் தரவேண்டும் என்றும் கண்ணீர் மல்க கோரிக்கை:

 

 

தஞ்சையை அடுத்துள்ள குளிச்சப்பட்டு கிராமத்தை சேர்ந்த கார்த்திகா எனும் பெண் தனது 3 வயது பெண் குழந்தை மற்றும் உறவினர்களுடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மலேசியாவில் கடத்தப்பட்டுள்ள தனது கணவர் விஜயராகவனை மீட்டுத் தருமாறு கோரி கண்ணீர்மல்க கோரிக்கை மனுவை அளித்தார்.

 

 

இது குறித்து கார்த்திகா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நான் குளிச்சப்பட்டு கிராமம் விவசாய குடும்பம் எனது கணவரின் தம்பி அசோக்குமார் மலேசியாவில் விஜ்ரா ரிசோர்சஸ் எனும் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் அந்த நிறுவனத்தில் தனது திருமணத்திற்க்காக 13 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய நிலையில் தஞ்சைக்கு வந்துவிட்டதால்,

 

எனது கணவர் விஜயராகவனை மலேசியாவில் உள்ள அவரது தம்பி வேலை பார்த்த நிறுவனத்திற்கே அனுப்பி வேலை பார்த்து 13 லட்சம் ரூபாய் கடனை அடைக்க அனுப்பி வைத்த நிலையில்,

 

தம்பி அசோக் குமார் வாங்கிய கடனுக்கு பல மடங்கு வட்டி போட்டு 70 லட்சம் ரூபாய் பணத்தை தரும்படி எனது கணவர் விஜயராகவனை மலேசியாவில் அடைத்து வைத்து கொடுமை படுத்துகின்றனர்.

 

நேற்று இருந்த நகைகளை எல்லாம் விற்று 5 லட்சம் ரூபாயை கொடுத்துவிட்டதாகவும்,

 

இன்னும் 65 லட்சம் ரூபாய்க்கு விவசாய நிலம், வீட்டு பத்திரங்களை கொடுக்குமாறு மிரட்டுவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தவர் தனது கணவரை மீட்டுத் தரவேண்டும் என்றார்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )