BREAKING NEWS

தூர்வாரப்படாமல் இருந்த வடிகால் வாய்க்காலை ஆய்வு செய்து தூர்வாரி கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

தூர்வாரப்படாமல் இருந்த வடிகால் வாய்க்காலை ஆய்வு செய்து தூர்வாரி கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

குளிச்சப்பட்டு கிராமத்தில் 80 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் இருந்த வடிகால் வாய்க்காலை நேரில் ஆய்வு செய்து தூர்வாரி கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு கிராம மக்கள் சந்தனம் மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

 

 

 தஞ்சை மாவட்டத்தில் பெய்த கன மழையில் குளிச்சப்பட்டு கிராமத்தில் 80 ஆண்டுகளுக்கு மேலாக வடிகால் வாய்க்கால் தூர்வாரமல் இருந்த காரணத்தால் மழைக்காலங்களில் வெள்ளநீர் விளை நிலங்களுக்குள் உட்புகுந்து நெல் பயிர்கள் சேதம் அடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனரஇந்த நிலையில் கடந்த வாரம் பெய்த மழையில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவிலான நெல் பயிர்கள் நீரில் முழ்கின.

 

இதுக்குறித்து செய்தி அறிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குளிச்சப்பட்டு கிராமத்திற்கு சென்று தண்ணீரில் மூழ்கி இருந்த நெல் பயிர்களை பார்வையிட்டு, வடிகால் வாய்க்கால் தூர்வார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து ஒரு வாரத்தில் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்பட்டது. 

 

இதனால் மகிழ்ச்சி அடைந்த குளிச்சப்பட்டு கிராம விவசாயிகள் தங்களது நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றி தந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை நேரில் சந்தித்து அவருக்கு சந்தனமாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )