BREAKING NEWS

உத்திரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கினால் அந்த கிராம மக்கள் பெருமளவில் பாதிப்புக்குளாகின்றனர்.

உத்திரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கினால் அந்த கிராம மக்கள் பெருமளவில் பாதிப்புக்குளாகின்றனர்.

செய்தியாளர் க.கார்முகிலன்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா உத்திரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கினால் அந்த கிராம மக்கள் பெருமளவில் பாதிப்புக்குளாகின்றனர்.

 

 

மேலும் இந்த குப்பை கிடங்கை தனியார் திருமண மண்டபம் மற்றும் வணிக கடைகளுக்கும் வாடகைக்கு விடப்படுவதாகவும் பொதுமக்கள் கோரிக்கை வைப்பதுடன் இதனை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த குப்பை கிடங்கை அகற்றி வேறு இடத்திற்கு மற்றவேண்டும் என கூறுகின்றனர்.

 

 

பள்ளி செல்லும் வழியில் இருப்பதனால் குழந்தைகளுக்கு சுவாசம் சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்பு உள்ளதாகவும், இடத்தை மாற்றி குப்பைகளை கொட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

CATEGORIES
TAGS