![](https://aramseithigal.com/wp-content/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-27-at-9.26.11-AM.jpeg)
கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.
நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியை தலைவர் வேல்முருகன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.! கூட்டணி கட்சி அரசியல் தலைவர்கள் பங்கேற்பு.!
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் விரிவாக்கத்துக்காக குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கும் முன்னர் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கும் ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை,
குடியிருக்க மாற்று இடம் போன்ற அம்மக்களின் நியாயமான 17அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி புது குப்பம் அம்பேத்கர் திடலில் இருந்து 3 கிலோமீட்டர் வரை பேரணியாக சென்று பின்னர் மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள மைதானத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி வேல்முருகன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன்,அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜாவாஹிருல்லா, திராவிட விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன்,
மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் ராஜீ, ம.க.இ.க இயக்கத்தின் பிரச்சாரப் பாடகர் கோவலன், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு என்.எல்.சி நிர்வாகத்தை எதிராகவும், ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி மற்றும் பல்வேறு அமைப்பின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கிளை பொறுப்பாளர்கள் மற்றும் இடம் கொடுத்து பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட உள்ள கிராமங்களின் மக்கள், தொழிலாளர் பெருமளவில் கலந்து கொண்டனர்.