BREAKING NEWS

வத்தலகுண்டு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை.

வத்தலகுண்டு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட வத்தலகுண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நெல் விவசாயிகள் வத்தலகுண்டு பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

 

இதையடுத்து இன்று மண்டல மேலாளர் திருமதி.மெர்லின் டாரதி மற்றும் நிலக்கோட்டை வட்ட வேளாண் அலுவலர்கள் இணை இயக்குனர் உட்பட அரசு அதிகாரிகள் வத்தலகுண்டு பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்குச் சென்று விவசாயிகளை சந்தித்து நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் நெல் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளையும் கேட்டு அறிந்தனர்.

 

Share this…

CATEGORIES
TAGS