BREAKING NEWS

மயிலாடுதுறை மாவட்டம் மின் பயனாளிகளுக்கு மின் இணைப்புடன் அதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம் மின் பயனாளிகளுக்கு மின் இணைப்புடன் அதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்.

செய்தியாளர் க.கார்முகிலன்.

 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மற்றும் சீர்காழி தாலுக்கவில் உள்ள மின் விநியோக பிரிவு அலுவலகங்களான தரங்கம்பாடி, திருக்கடையூர், ஆக்கூர் செம்பனார்கோவில், கிடாரங்கொண்டான், மற்றும் பூம்புகார் பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின் பயனாளிகளுக்கு மின் இணைப்புடன் அதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்,

 

 

03.01.2023 மற்றும் 04.01.2023 ஆகிய தினங்களில் காலை 9மணி முதல் மாலை 5.15மணி வரை தேதி மற்றும் பகுதி வாரியாக ஆதார் சிறப்பு முகாம் நடைபெறும் என்று உதவி செயற்பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு ) அப்துல் வகாப் மறைக்காயர் தெரிவித்துள்ளார்.

 

03.01.2023 இன்று ஆதார் இணைப்பு சிறப்பு முகாம் பொறையார் புதிய பேருந்து நிலையம் சமுதாய கூடம், திருக்கடையூர் ஊராட்சி மன்ற அலுவலகம், ஆக்கூர் ஊராட்சி மன்ற அலுவலகம், நடுக்கரை ஊராட்சி மன்ற அலுவலகம், தருமபுரம் ஐஓபி எதிர்புறம், பரசலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகிய இடங்களிலும்,

 

 

04.01.2023 இன்று ஆதார் இணைப்பு சிறப்பு முகாம் பொறையார் புதிய பேருந்து நிலையம் சமுதாய கூடம், திருக்கடையூர் ஊராட்சி மன்ற அலுவலகம், ஆக்கூர் ஊராட்சி மன்ற அலுவலகம், நடுக்கரை ஊராட்சி மன்ற அலுவலகம், தருமபுரம் ஐஓபி எதிர்புறம், பரசலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகிய இடங்களிலும் நடைபெறும் முகாமை பயன் படுத்திகொண்டு பொதுமக்கள் பயனடையுமாறு உதவிஇயக்குனர் அறிவித்துள்ளார்.

 

 

CATEGORIES
TAGS