பள்ளியில் முன்னறிவிப்பு இல்லாமல் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு.
தஞ்சாவூர்,
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
தஞ்சையை அடுத்துள்ள கண்டியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில்
முன்னறிவிப்பு இல்லாமல் ஆய்வு செய்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார்.
மாணவர்களின் வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு, பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையான கோரிக்கைகளை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
அமைச்சரின் எதிர்பாராத வருகையையடுத்து மாணவர்கள் உற்சாகத்துடன் கரவொலி எழுப்பி மகிழ்ந்தனர். மாணவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் எதிர்காலத்தில் என்ன துறைக்கு செல்ல விரும்புகிறீர்கள் என கேட்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
CATEGORIES கல்வி
TAGS Dmkஅரசியல்கண்டியூர் அரசு உயர்நிலைப் பள்ளிகல்விதஞ்சாவூர்தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிமுக்கிய செய்திகள்