கோழி கழிவுகளை சரியான முறையில் பராமரிக்காததால் நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

கோழி கழிவுகளையும், இறந்த கோழிகளையும் சரியான முறையில் பராமரிக்காததால் ஈக்கள் பரவுவதாகவும், நோய்கள் வருவதாகவும் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த தூங்காவி ஊராட்சிக்கு உட்பட்ட மலையாண்டிபட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறேன். அந்தப் பகுதியில் ஜோத்தம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சுகுனா புட்ஸ் என்ற தனியார் கோழி உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தில் இறந்த கோழிகளை முறையாக கையாளாமல் திறந்தவெளி குழிகளில் போட்டு சரியான முறையில் மூடாமல் விடுவதாகவும், கோழி கழிவுகள் பகுதியிலேயே தேங்கி முறையாக சுத்தம் செய்யாமல் இருப்பதால் ஊர் பகுதியில் அதிக அளவு ஈக்கள் பரவி நோய்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து பல்வேறு புகார்கள் அளித்தும் நடவடிக்கை எதுவும் இல்லை என தெரிவிக்கின்றனர். மேலும் முறையான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
