BREAKING NEWS

5ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

5ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5ஜி சேவையை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

 

அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5ஜி சேவையை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

 

 

இந்திய மொபைல் காங்கிரசின் (ஐ.எம்.சி.) 6-வது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

 

ஐ.எம்.சி. 2022 புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ் என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1 முதல் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 5ஜி சேவையைப் பொறுத்தவரையில் அலைவரிசை ஏலம் அனைத்தும் முடிந்துவிட்டன.

 

பெரும்பாலான அலைவரிசையை வாங்கிய ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ஏர்டெல் இரண்டாம் இடத்தில் உள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )