BREAKING NEWS

5 பவுன் தங்க நகை, ஒன்றரை இலட்சம் ரொக்கம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து சேதம்.

5 பவுன் தங்க நகை, ஒன்றரை இலட்சம் ரொக்கம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து சேதம்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஆலச்சம்பாளையம் பகுதியில் முருகேசன் காமாட்சி வசித்து வருகிறார்கள். இவர், இன்று வழக்கம்போல கூலி வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், அவரது மனைவி காமாட்சி வீட்டை பூட்டிவிட்டு, தனது 2 குழந்தைகளையும் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

 

அப்போது, திடீரென்று ஏற்பட்ட மின்கசிவு காரணமாக முருகேசனின் கூரை வீடு தீவிபத்துக்குள்ளானது. இந்த தீவிபத்தில் 5 சவரன் நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கம் உள்பட அனைத்து பொருட்களும் தீயில் கருகி நாசமாகின. இந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் எடப்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

 

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த எடப்பாடி தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

மேலும், சம்பவ இடத்திற்கு எடப்பாடி காவல் ஆய்வாளர் சந்திரலேகா நேரில் சென்று ஆய்வு செய்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த தீவிபத்து சம்பவத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )