தஞ்சாவூர், 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசெல்லியம்மன் ஆலய குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீசெல்லியம்மன் ஆலய குடமுழுக்கு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட கிரமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்பு.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூர் பகுதியில் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் கடந்த ஓராண்டுகளாக, பல லட்சம் ரூபாய் செலவில் திருக்குடமுழுக்கு பணிகள் நடைபெற்றது வந்தது.

பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், கடந்த ஒன்றாம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
தினமும் காலை மாலை என யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று ஆறாம் கால பூஜைகள் முடிவுற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழுங்க விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது.

இதில் ஒக்கநாடு கீழையூர், ஒக்கநாடு மேலையூர், ஒரத்தநாடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் குடமுழுக்கு முடிந்த பின்னர் பக்தர்களுக்கு ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது.
