மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்து வரும் மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்து வரும் மோடி அரசை கண்டித்து. மாவட்ட குழு உறுப்பினர் தமிழ்மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு விருத்தாசலம் காவல்துறை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜ் தலைமை காவலர்கள் செல்வகுமார், சுந்தர் உள்ளிட்டோர் தேநீர், பிஸ்கட் வழங்கினர் இதனைப் பார்த்த அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் காவல்துறையினரை பாராட்டியுள்ளனர்.
CATEGORIES கடலூர்
TAGS கடலூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்முக்கிய செய்திகள்விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம்