தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட ராட்சஸ குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீன்..

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் முக்கிய சாலையில் தபால் நிலையம் எதிரே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட ராட்சஸ குழாய்கள் பதிக்கப்பட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு குடிநீர் செல்கிறது.
இக்குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்வது வழக்கமாக இருந்து வருகிறது சங்கரன்கோவில் பொது மக்களுக்கு குடிநீர் வழங்குவது குறைந்தது 7 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குழாய்கள் உடைந்து பல மணி நேரம் குடிநீர் வீணாக சாலையில் செல்லுவதை கண்டு பொதுமக்கள் அரசின் மெத்தனப் போக்கை குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் குழாய் உடைக்கு ஆறு போல் ஓடிவரும் குடிநீரை உடைப்பை இதுவரை சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை என அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.