பாஜக மாநில பட்டியல் அணி பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்

கோவில்பட்டி பாஜக மாநில பட்டியல் அணி பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைகள்,சொத்து முதலீடு ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
துத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ராஜூவ் நகர் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி மாநில பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணன் என்பவர் வீட்டில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் ஒரு பெண் உட்பட மூன்று அதிகாரிகள் மற்றும் வங்கி ஊழியர்கள் இன்று காலை 8 மணி அளவில் சோதனை நடத்தி வந்த நிலையில் கட்டுமான ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.
மேலும் வெளியூரிலிருந்து இல்லத்துக்கு வந்த சிவந்தி நாராயணனை அமலாக்க பிரிவு அதிகாரிகள் அரை மணி நேரமாக விசாரணை நடத்தினர். பின்னர் அவரை அழைத்து கொண்டு ஏ.கே.எஸ். தியேட்டர் சாலையில் உள்ள அவரது ஸ்ரீ சிவந்தி எண்டர்பிரைசஸ் நிறுவன அலுவலகத்தில் வந்து சோதன நடத்தினார். பின்னர் மீண்டும் அவரது வீட்டிற்கு வந்து சோதனையை தொடர்ந்தனர்.
காலை 8 மணியளவில் தொடங்கிய சோதனை இரவு 9.00 மணியளவில் நிறைவுபெற்றது.ஏறத்தாழ 12 மணி நேரமாக நடைபெற்ற இந்த சோதனையில் கட்டுமான பணி ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைகள்,சொத்து முதலீடு ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
ஆனால் அமலாக்க பிரிவு அதிகாரிகள் தரப்பில் சோதனையில் என்னென்ன கைப்பற்றப்பட்டது என்பது குறித்து தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.